வெஸ்பா ஸ்கூட்டர்
பியாஜியோ இந்தியா நிறுவனம் 2020 வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் வெஸ்பா எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிப்ட் மாடல்களின் முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. 2020 வெஸ்பா ஃபேஸ்லிப்ட் மாடல்கள் விற்பனையகங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.
இரு ஸ்கூட்டர் மாடல்களும் இந்தியாவில் இம்மாத முதல் பாதியில் அறிமுகம் செய்யப்படும் என பியாஜியோ இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டெய்கோ கிராஃபி தெரிவித்தார். விரைவில் நாடு முழுக்க இயங்கி வரும் விற்பனையகங்களில் 2020 வெஸ்பா ஃபேஸ்லிப்ட் மாடல்கள் கிடைக்கும் என தெரிகிறது.
2020 வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிப்ட் மாடல்கள் 125சிசி மற்றும் 150சிசி பிஎஸ்6 ரக என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய வெஸ்பா மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பியாஜியோ இந்தியா தெரிவித்து இருக்கிறது.
வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் மாடல்களில் மோனோக்யூ ஸ்டீல் பாடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்டி-லாக் பிரேக்கிஙஅ சிஸ்டம் அல்லது கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ட்வின் பாட் கேலிப்பர் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.
இரு ஸ்கூட்டர்களிலும் 5 ஸ்போக் பெட்டல் டிசைன் வீல் மற்றும் அகலமான டையர்கள், எல்இடி ஹெட்லைட், டே-டைம் ரன்னிங், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், பூட் லைட் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.