மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்

நவம்பர் 28 அன்று அமைதியாக காலமான எங்கள் தலைவர் டி ஆனந்த கிருஷ்ணனின் மறைவை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.என்று அவரது Usaha Tegas Sdn Bhd நிறுவனம் அறிவித்துள்ளது.

ட்ரம்ப் நியமித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அமெரிக்காவில் இம் மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் அடுத்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

சுவரில் டேப் போட்டு ஒட்டிய ஒற்றை 'வாழைப்பழம்' 180 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

அமெரிக்காவின் நியூயோர்க் ஏல மையத்தில் சுவற்றில் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் கடந்த புதன்கிழமை ஏலத்திற்கு வந்துள்ளது.

சீனா, 9 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க சலுகை அறிவிப்பு

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டுக்கு என்ன காரணத்துக்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம்.

ரஷ்யாவில் அரசு ஆதரவு யூடியூப் சேனல்களை அகற்றியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு மாஸ்கோ நீதிமன்றம் வரலாற்றிலேயே மிகப் பெரிய அபராதமாக 2.5 டெசில்லியன் டொலர்கள் விதித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக யூடியூப் பல ரஷ்ய அரசு ஆதரவு சேனல்களை தடை செய்தது. இதைத் தொடர்ந்து வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2க்கு பின்னர் 26 பூஜ்ஜியங்கள் கொண்ட மிகப் பெரிய தொகையாகும், இது உலகின் மொத்த பணத்தை விடவும், நாடுகளின் மொத்த உற்பத்தியை விடவும் அதிகம்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்

<span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-family:&quot;Vijaya&quot;,sans-serif">உக்ரைன் மீது ரஷ்யா தொடர் போரினை நடத்தி வரும் நிலையில், தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</span></span></span>

காஸாவில் நிவாரணப் பொருட்கள் கடத்தல்

காஸாவில் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த சுமார் 100 லொரிகளிலுள்ள நிவாரணப் பொருட்களை ஆயுதம் ஏந்திய கும்பல் கடத்தி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2 மாதங்களில் இஸ்ரேல் தாக்குதலில் 200-க்கும் அதிக குழந்தைகள் கொலை

கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிக்கி லெபனானை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

அமெரிக்க நீண்டதூர ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்

உக்ரைன், அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ தளத்தை தாக்கியுள்ளது. ரஷ்ய இராணுவம் இந்தத் தகவலை வெளியிட்டது.