சாய் அபயங்கர் லோகேஷுடன் இணைகிறார்

67 Views
Editor: 0

கட்சி சேர என்ற பாடலின் மூலம் கவனம் பெற்ற சாய் அபயங்கர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில்v நடிகர் ராகவா லோரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்..

கட்சி சேர என்ற பாடலின் மூலம் கவனம் பெற்ற சாய் அபயங்கர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில்v நடிகர் ராகவா லோரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

 

ஏராளமான பாடல்களில் தங்களது குரலால் கவர்ந்த திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகன் சாய் அபயங்கர். இவர் இசையமைத்துப் பாடி நடித்த, கட்சி சேர என்ற பாடல், இணையத்தையே ஆக்கிரமித்து, ரீல்ஸ்களாக ட்ரெண்ட் அடித்தது.

 

அதைத் தொடர்ந்து வெளியான இவரது ஆச கூட என்ற பாடலும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.