வீட்டிலேயே செய்யலாம் ஹாட் சாக்லேட் மில்க்:
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
நாட்டு சர்க்கரை தூள் - 2 டேபிள்ஸ்பூன்
கெட்டியான பால் - 1 கப்
லவங்க பட்டை தூள் - சிறிதளவு
செய்முறை:
முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளவும்.
அகன்ற கிண்ணத்தில் சிறிதள்வு பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை, பட்டை தூள், கோகோ பவுடர் ஆகியவற்றை போட்டு கட்டி பிடிக்காமல் நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.
அதேபோல் மீதமிருக்கும் பாலையும் கொதிக்க வைக்கவும். பால் கொதிக்க தொடங்கியதும் இறக்கி சாக்லேட் கலவையுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நுரை வரும்வரை அடித்து கலக்கி பரிமாறலாம்.
சூப்பரான ஹாட் சாக்லேட் மில்க் ரெடி.