வாணியம்பாடியில் சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் சமையல் போட்டி.

32 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியில் சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் சமையல் போட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது..

வாணியம்பாடியில் சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் சமையல் போட்டி.

வாணியம்பாடி, டிச.2- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியில் சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் சமையல் போட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் மாவட்ட கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள், குடும்ப தலைவிகள் கலந்துக் கொண்டனர்.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக இந்தியன் ஆயில் நிறுவன வேலூர் மண்டல விற்பனை மேலாளர் ஜிதேஷ் ஷாஜி கலந்துக் கொண்டு எரிவாயு சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு பாதுகாப்பு அம்சங்கள், பாதுகாப்பாக சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை, ஆபத்து காலங்களில் செயல்படும் விதங்களை குறித்தும் விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் தனியார் கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் தே.பிரபாகரன் , அருண், ஜேசன், யுவராஜன், பாலாஜி,

சுரேந்திரன்,பிரபு உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

முன்னதாக மாவட்ட முழுவதிலும் இருந்து வந்திருந்த குடும்ப தலைவிகளுக்கு சமையல் போட்டி நடைபெற்றது. இதில் சமயல்காரர்கள் எஸ்.பழனிவேல் மற்றும் பி.பிரகாசம் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு சமையல் போட்டியில் சிறந்த முறையில் சமையல் செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முடிவில் ஜி.யுவராஜன் நன்றி கூறினார்.

மாவட்டச்செய்திகள்