இன்றைய ராசி பலன் – 28-08-2020

16 Views
Editor: 0

இன்றைய ராசி பலன் – 28-08-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்..

மேஷம்:

Mesham Rasiமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்:

Taurus zodiac signரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக திடீர் வெளியிட பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

Gemini zodiac signமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிப் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கடகம்:

Kadagam Rasiகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வந்து சேரும்.

சிம்மம்:

Leo zodiac signசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி:

kanniகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

துலாம்:

Thulam Rasiதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்:

Scorpius zodiac signவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும்.

தனுசு:

dhanusuதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். இன்று பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் நிம்மதி இருக்கும்.

மகரம்:

Magaram rasiமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்பம்:

Kumbam Rasiகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோக ரீதியான எதிர்பாராத திடீர் வெளியிட பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்:

meenamமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு எந்த செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசினால் உங்கள் பிரச்சனைகள் தீரும்.

காலச்சுவடு செய்திகள்