யோகி பாபுவின் காக்டெயில் திரை விமர்சனம்..

36 Views
Editor: 0

யோகி பாபுவின் காக்டெயில் திரை விமர்சனம்.. காமெடி கலாட்டாவா இல்ல மொக்க பண்ணிட்டாங்களா பாஸ்.

கொரானாவின் தாக்கத்தால் திரையரங்கில் வெளியாக காத்திருக்காமல், நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள படம். யோகி பாபு மட்டுமே நமக்கு மிகவும் பரிச்சயமானவர். தனியாக படத்தை தூக்கி நிறுத்தினாரா இல்லையா என வாங்க பார்க்கலாம்…..

கதை – பழங்காலத்து சிலை கடத்தலில் ஈடுபடும் கும்பலை பிடிக்க திட்டம் தீட்டுகிறார் போலீஸ் ஷியாஜி ஷிண்டே. மறுபுறம் அவர் மகளை காதலிக்கும் நம் ஹீரோ. அவரது நண்பர்களாக முடிதிருத்தம் செய்யும் யோகி பாபு, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜெண்டாக AG, திருமணத்திற்கான கார் ஓட்டும் KPY பாலா.

நிச்சியதார்த்திற்கு முன் சரக்கு பார்ட்டி நடக்க, விடிந்ததும் வீட்டில் பெண்ணின் பிணம் இருக்கிறது. அந்த சடலத்தை மறைக்க இவர்கள் அடிக்கும் லூட்டியே மீதி படம். கிளைமாக்ஸ் காட்சியில் அந்த பெண் யார் என்ற விவரமும் தெரியவர சிலையும் கிடைக்க சுபமாக முடிகிறது படம்.

 

சினிமா அலசல் – நாம் ப்ளாக் அண்ட் வயட் காலத்தில் இருந்து பார்த்த பல பட காட்சிகளின் காக்டெயில் கலவை தான் இப்படம்.

கதையாக கேட்க்கும் பட்சத்தில் முழு காமெடி ரோலர் கோஸ்டர் போல தான் தோன்றினாலும், படத்தின் மேக்கிங்கில் கோட்டை விட்டுவிட்டனர் இந்த டீம்.