நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் பாடல்களையும் / காட்சிகளையும் பயன்படுத்த நயன்தாரா தரப்பில் இருந்து படத்தின் தயாரிப்பாளர் தனுஷிற்கு NOC கேட்டு விண்ணப்பிக்க தனுஷ் அதற்காக காப்பி ரைட்ஸ் தொகையை கோரி இருக்கிறார். காப்பி ரைட்ஸ் தொகை வழங்கப்படாத நிலையில் அந்த பாடல்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை மறுத்து இருக்கிறார்.
இதற்கிடையில் நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி அதில் நானும் ரவுடிதான் பட பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் சில இடம்பெற்றுள்ளதாக கூறி அதற்காக 10 கோடி காப்பி ரைட்ஸ் தொகை கேட்டு நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தனுஷ்.
நோட்டிஸிற்கு கோர்ட்டில் பதில் சொல்லி இருக்கலாம் ஆனால் அம்மணி நான் தனியாக வந்தவள் நீங்கள் அப்பா அண்ணனால் வந்தவர், நானும் ரவுடிதான் பட வெற்றியால் உங்களுக்கு பொறாமை என காட்டமாக பதில் அறிக்கையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
ஒரு தயாரிப்பாளராக தனுஷ் செய்தது மிகச்சரியே. காப்பி ரைட்ஸ் தொகை முழுவதுமாக தனுஷிற்கு மட்டும் சென்று சேரப்போவது இல்லை படத்தின் இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர்கள் (படத்தின் பல பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார்), பாடகர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியுள்ளது. காட்சிகளுக்கு தயாரிப்பாளர்தான் உரிமையாளர்.
நயன்தாரா அந்த பாடல்களையும் காட்சிகளையும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த கேட்கிறார். தான் கல்லா கட்டா இத்தனை பேருக்கு சேர வேண்டிய உரிமையை விட்டுவிட்டு இவர் கேட்டதும் தூக்கி கொடுத்துவிட வேண்டுமா என்ன ?
தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு
பதிவு: நவம்பர் 18, 2024 11:51 76 Viewsநெட்ப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் பாடல்களையும் / காட்சிகளையும் பயன்படுத்த நயன்தாரா தரப்பில் இருந்து படத்தின் தயாரிப்பாளர் தனுஷிற்கு NOC கேட்டு விண்ணப்பிக்க தனுஷ் அதற்காக காப்பி ரைட்ஸ் தொகையை கோரி இருக்கிறார்..