விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு

69 Views
Editor: 0

ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாக அறிவித்துள்ளனர்..

ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு செவ்வாய்க்கிழமை நேற்று (நவ. 19) இரவு அறிவித்தார். இந்த நிலையில், சில மணிநேரத்திலேயே ஏ.ஆர். ரஹ்மானும் அதனை உறுதி செய்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ``நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி’’ என்று கூறியுள்ளார்.