2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியானது கே.ஜி.எஃப் திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி மக்களின் மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றது.
நடிகர் யாஷ் இப்படங்களில் வெற்றிக்கு பிறகு டாக்சிக் மற்றும் ராமயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த நேர்காணலில் கே.ஜி.எஃப் 3 திரைப்படத்தை குறித்து தகவல் கூறியுள்ளார் " கே.ஜி.எஃப் 3 திரைப்படம் கண்டிப்பாக எடுப்போம். தற்போது டாக்சிக் மற்றும் ராமாயணா திரைப்படங்களில் கவன செலுத்தி வருகிறேன்.
கேஜிஎஃப் 3 திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. சரியான நேரம் வரும்பொழுது மிக பிரம்மாண்டமாக எடுப்போம்" என கூறினார்.
இக்கேள்வியை இந்திய கிரிக்கெட் முன்னணி வீரரான சுப்மேன் கில் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது