இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்திற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகவுள்ளது.
உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளதுடன் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கான முன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.