வாராக்கடன் மற்றும் நிர்வாக கோளாறாகு காரணமாக எஸ் வங்கி கடுமையாக பிரச்சனைகளை சந்தித்து வருவது நாம் அறிந்ததே. கடந்த ஆண்டு மட்டும் இந்த வாங்கி சுமார் 1,500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. அதனால் உடனே ரிசர்வ் வங்கி இந்த விடையத்தில் தலையிட்டு எஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடியாக்கியை மேற்கொண்டுள்ளது.
தற்போது ஒருவர் எஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தாலும் அவர் வெறும் 50,000 ரூபாய் மட்டுமே ஒரு மாதத்திற்கு அந்த வங்கியில் இருந்து எடுக்க முடியும். இதனால் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வியாபாரிகள், மாத சம்பளம் வாங்குவோர் இப்படி பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் சுமார் 1300 கோடி ரூபாயை எஸ் வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்த திருப்பதி தேவஸ்தானம், அந்த பணம் முழுவதையும் அந்த வங்கியில் இருந்து சமீபத்தில் எடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தான்.
எஸ் வங்கி கடுமையாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் என்பதை சரியாக கணித்த சுப்பா ரெட்டி, அந்த வங்கியில் திருப்பதி தேவஸ்தானத்தின் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்துள்ளார்.
தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு பெருமாளின் அருளால் தான் அவ்வளவு பணமும் முன்பாகவே தேவஸ்தானத்தின் கைக்கு சென்றுவிட்டது என்று பக்தர்கள் பரவசம் அடைகின்றனர்.