உங்கள் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வாரம் 1 முறை இத மட்டும் செய்யுங்க போதும்!
நாம் கஷ்டப்பட்டு முன்னேற நினைக்கும் பொழுது நம்மை பிடிக்காத சிலர் நம் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் நடந்து கொள்வார்கள். அவர்கள் எதுவும் செய்யாவிட்டாலும் ஒரு சிலரால் நமக்கு இயற்கையாகவே பல தடைகள் வந்து சேரும். நாம் ஒரு அடி முன்னே வைத்தால் நம்முடைய எதிரிகளின் பார்வை மொத்தமும் நம்மிடம் திரும்பி விடும். எப்படியாவது இவர்களை கீழே தள்ளிவிட்டு நாம் மட்டும் முன்னேற வேண்டும் என்கிற கெட்ட எண்ணம் கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள். இது போன்றவர்களை நாம் நேரடியாக ஒன்றும் செய்ய தேவையில்லை.
ஆண், பெண் என்கிற வித்தியாசம் பார்க்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் எதிரிகள் தொல்லை இருக்கலாம். எந்த விதமாக உங்களுக்கு எதிரிகள் இருந்தாலும் நம்முடைய முன்னேற்றத்தை தடுக்க கூடிய நபர்களிடமிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வாரம் ஒரு முறை இதுபோல் செய்து வரலாம். இதற்கு நல்ல பலன்கள் நிச்சயம் உண்டு. எதிரிகளை முறியடிக்கும் தன்மை இந்த ஒரு பொருளுக்கு உண்டு. இதை வைத்து நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
அப்படி என்ன பொருள் அது தெரியுமா? இந்த பொருள் எதிரிகளை மட்டுமல்ல, துஷ்ட சக்திகளையும், தீய திருஷ்டிகளையும் தவிடு பொடி ஆக்கி விடும். அது தான் வெண்கடுகு என்று கூறுவார்கள். நாட்டு மருந்து கடைகளில் பத்து ரூபாய்க்கு கூட வெண்கடுகு கிடைக்கும். இதை வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளை மட்டுமில்லங்க! உங்கள் வீட்டில் சதா பிரச்சனைகள் இருக்கும் பொழுது இந்த வெண்கடுகை கருப்பு துணியில் முடிச்சாக கட்டி, அகல் விளக்கில் வைத்து வாசலுக்கு நேரே எரித்து விடலாம். வெண்கடுகு எந்த அளவிற்கு வெடித்து பஸ்பம் ஆகிறதோ அதே அளவிற்கு உங்களுடைய வீட்டில் இருக்கும் பிரச்சனைகளும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.தொழில் முறை, வியாபார முறை எதிரிகளை துவம்சம் செய்ய, எல்லா விதமான எதிரிகளையும் நம் மேல் வைத்துள்ள பார்வையை திசை திருப்ப, வாரம் ஒருமுறை வீட்டில் இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெண்கடுகை காலில் மிதி படாதவாறு வீட்டில் நான்கு ஓரங்களிலும் சிறிதளவு தூவி விடுங்கள். இந்த பரிகாரத்தை திங்கள் அல்லது சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். இந்த இரண்டில் உங்களுக்கு எந்த கிழமையில் வசதியாக இருக்கிறதோ அந்தக் கிழமையில் நீங்கள் செய்து கொள்ளலாம். ஆனால் வாராவாரம் செய்ய வேண்டும்.
மறுநாள் காலையில் அதை துடைப்பத்தால் பெருக்கி எடுத்து, ஒரு கருப்பு துணியில் போட்டு கருப்பு நூல் கொண்டு முடிந்து கொள்ளுங்கள். இதை வீட்டின் தலை வாசலை கடந்து ஒரு ஓரத்தில் நெருப்பிட்டு கொளுத்தி விடுங்கள். இவ்வாறு செய்வதால் உங்களுக்கு எந்த விதமான எதிரியாக இருந்தாலும், அவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள். உங்கள் எதிரிகளின் சூழ்ச்சி ஒட்டு மொத்தமாக முறியடித்து விடும் ஆற்றல் இந்த வெண்கடுகுக்கு உண்டு.
நமக்கு எதிரிகள் இருக்கிறார்களோ! இல்லையோ! முதலடியாக முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து வைக்கிறோம் என்றாலோ, ஏதாவது ஒரு புதிய விஷயத்தை செய்ய நினைக்கிறோம் என்கிற பொழுதோ இது போல் வாராவாரம் வீட்டில் செய்து வருவது மிகவும் நல்லது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை ஒளிந்து கொண்டிருக்கும். அதை நாம் வெளிப்படுத்தும் சரியான தருணத்தில் இது போன்று எதிரிகளின் தொல்லையால் பாதிக்கப்படாமல் இருக்க வெண்கடுகை இது போல் செய்து வந்தால் சிறப்பான பலன்களை பெறலாம்.
நமக்கு எதிரிகள் இருக்கிறார்களோ! இல்லையோ! முதலடியாக முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து வைக்கிறோம் என்றாலோ, ஏதாவது ஒரு புதிய விஷயத்தை செய்ய நினைக்கிறோம் என்கிற பொழுதோ இது போல் வாராவாரம் வீட்டில் செய்து வருவது மிகவும் நல்லது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை ஒளிந்து கொண்டிருக்கும். அதை நாம் வெளிப்படுத்தும் சரியான தருணத்தில் இது போன்று எதிரிகளின் தொல்லையால் பாதிக்கப்படாமல் இருக்க வெண்கடுகை இது போல் செய்து வந்தால் சிறப்பான பலன்களை பெறலாம்.