ஒரு மாத்திரை வெறும் 68 ரூபாய் தான்.. இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பு மாத்திரை : சிப்லா நிறுவனம் அறிவிப்பு!!

27 Views
Editor: 0

மும்பை : இந்தியாவில் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் 'சிப்லா', கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மாத்திரைக்கு இந்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளது. .

மும்பை : இந்தியாவில் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் 'சிப்லா', கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மாத்திரைக்கு இந்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வர உள்ள சிப்லென்சா என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ 68 என சிப்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஜப்பானில் இன்புளூவென்சாவுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரைகள் தரப்படுகின்றன. அந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கும் சோதனை முறையில் டாக்டர்கள் தருகின்றனர். இந்த மாத்திரைகளை இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தி, அவற்றை தயாரித்து சந்தையிட மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற கிளென்மார்க் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த மாத்திரைகள் லேசான பாதிப்பு முதல் மிதமான பாதிப்பு வரை உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பதாக அந்த நிறுவனத்தார் கூறுகின்றனர்.
 
இந்நிலையில், முன்னணி பார்மா நிறுவனமான சிப்லா நிறுவனம் இந்தியாவில் பேவிபிராவிர் மருந்தை தயாரிக்க இந்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளது.இந்த மருந்துக்கு சிப்லென்சா என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், மாத்திரை வகையிலான இந்த மருந்து ஒன்றுக்கு ரூபாய் 68 வீதம் விற்கப்படும் என சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த மருந்து மருத்துவமனை மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முதலில் இந்த மருந்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.