இட்லி மாவுக்கு உப்பு சேர்ப்பதால் எளிதில் புளிக்குமா? 

24 Views
Editor: 0

எங்க வீட்டில் எல்லோருக்குமே வேலை அதிகம் இருக்கும் என்பதால், சமைக்க நேரம் இல்லாத போது, தோசை ஊற்றி சாப்பிடட்டும் என்று இட்லி மாவு கொஞ்சம் அதிகமாவே அரைத்து பிரிட்ஜில் போட்டு விடுவார்கள்..

இட்லி மாவுக்கு உப்பு சேர்ப்பதால் எளிதில் புளிக்குமா? என்ன நடக்கும் உள்ளே? அம்மாகிட்ட இந்த இரகசியத்த சொல்லி அசத்துங்க!

எங்க வீட்டில் எல்லோருக்குமே வேலை அதிகம் இருக்கும் என்பதால், சமைக்க நேரம் இல்லாத போது, தோசை ஊற்றி சாப்பிடட்டும் என்று இட்லி மாவு கொஞ்சம் அதிகமாவே அரைத்து பிரிட்ஜில் போட்டு விடுவார்கள். முன்னர் கிரைண்டரில் ஆட்டி பிரிட்ஜில் வைத்தால், இரண்டு நாட்களில் புளித்துவிடும். சரி கை படுவதால் தான் புளித்துப்போகிறது என்று, மொத்தமாக அரிசி ஊற வைத்து, கடையில் கொடுத்து மெஷினில் அரைத்து வாங்கி வைத்துப்பார்த்தோம். 

இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கடையில் கொடுத்து அரைத்து மூன்று நாளைக்கு தாக்குப்பிடித்தது. ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு வாரத்துக்கும் மேல் வைத்தும் ஒன்றும் ஆகவில்லை என்கின்றனர். சரி எங்க தப்பு நடக்கிறது என்று கண்டுபிடிக்கப்பார்த்தேன். ஒரே ஒரு சின்ன விஷயம் தான். நாங்கள் மாவு அரைக்க கொடுக்கும் போதே, உப்பு சேர்த்து கொடுத்து விடுகிறோம். அவர்கள் மாவு அரைக்கும் போது உப்பு சேர்ப்பது இல்லையாம்.

idly idly-maavu rice

உப்பு சேர்க்காமல் அரைத்து வாங்கிக்கொண்டு, தேவைப்படும் போது, வேறு பாத்திரத்தில் அளவாக எடுத்துக்கொண்டு, அப்போது மட்டும் உப்பு சேர்த்துக்கொள்கின்றனர். பிரிட்ஜில் இருக்கும் மாவு, உப்பு சேர்க்காமல் வைப்பதால், ரொம்ப நாளுக்கு புளிக்காமல் இருக்கிறது. குளிர் காலம் என்றால் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்கும். வெயில் காலம் என்றால், பிரிட்ஜில் வைத்தாலும் ஒரு வாரத்திற்குள் புளிப்பு ஏறிவிடும். இதுவே உப்பு சேர்த்து மூடி வைத்துவிட்டால், இரண்டே நாளில், குமிழ் போட்டுக்கொண்டு மேலே வரும்.

idly idly-maavu rice

உப்பு சேர்க்காமல் இருந்தால், நொதித்தல் மெதுவாக நடைபெறுமாம். அதனால் தான் சிக்கிரம் புளிப்பதில்லை. அதே போல அரைக்கும் போதே கொஞ்சம் கெட்டியாக சரியான பதத்தில் அரைத்துவிட்டால், பிறகு தேவைக்கு ஏற்ப நீர் ஊற்றி இளக வைத்துக்கொள்ளலாம். ஆரம்பத்திலேயே அதிக தண்ணீர் ஊற்றிவிட்டால், இட்லிக்கு, தோசைக்கு என்று சரியான பதத்தில் மாவை பிரித்தெடுக்க முடியாது. நிறைய முறை எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டதால் சொல்கிறேன். 

கிச்சன் கில்லாடிகள்