மில்க் கேசரி செய்யலாம் வாங்க

25 Views
Editor: 0

ரவை கேசரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் சூப்பரான சுவையில் மில்க் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்..

மில்க் கேசரி

தேவையான பொருட்கள் :

பால் - 200 மில்லி லிட்டர்

சர்க்கரை - 100 கிராம்

ஏலக்காய் - 7
வெள்ளை ரவை - 100 கிராம்
நெய் - 30 மில்லி
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு - 2
பிஸ்தா - 2

செர்ரி பழம் - 2

மில்க் கேசரிசெய்முறை:

வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி, கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

கேசரிக்கு நிறம் வேண்டு மென்றால், பாலுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்க்கலாம்
 

அல்லது கேசரி மீது ஒரு சிட்டிகை குங்குமப் பூவைத் தூவியும் பரிமாறலாம்.

 

கிச்சன் கில்லாடிகள்