திருப்பத்தூர் மாவட்டம் சுகாதார திருவிழா-சிறப்பு மருத்துவ முகாம்

71 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட  நெல்லிவாசல் ஊராட்சி புலியூர் ஆரம்ப பள்ளியில்..

     பிப்.26. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட  நெல்லிவாசல் ஊராட்சி புலியூர் ஆரம்ப பள்ளியில் இன்று(26/02/2020) சுகாதார திருவிழா- சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர், திருமிகு. மா.ப.சிவன் அருள், அவர்கள் தலைமை தாங்கினார்.முன்னதாக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர். ச.பசுபதி.MD., அனைவரையும் வரவேற்றார்.திருவண்ணாமலை  பாராளுமன்ற உறுப்பினர்  சி.என்.அண்ணாதுரை அவர்கள் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. அ.நல்லதம்பி,வாழ்த்துரை வழங்கினார். திருப்பத்தூர் துணை இயக்குநர்,சுகாதார பணிகள், டாக்டர்.K.S.T.சுரேஷ்.MBBS,DCH,DPH., திட்ட விளக்கவுரையாற்றினார்.
முகாமில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் மொத்தம் 927 பேர் பயன்பெற்றனர். 34 பேருக்கு ஈசிஜி  எடுக்கப்பட்டது. 72 பேருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.220 பேருக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. 8பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.முகாமில் கலந்து கொண்ட  கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உயர்தர சரிவிகித உணவு பரிமாறப்பட்டது.முகாமின் இறுதியில்  துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் திருமிகு.P.S.சங்கர் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மாவட்டச்செய்திகள்