நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் வி.துஃபேல் அஹமத் தலைமை வகித்தார். செயலாளர் ஜெ.முஹம்மத் ஷாஜஹான், நிர்வாகி எஸ்.கே.அமானுல்லா, வட்டாட்சியர் சிவபிரகாசம், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) சுசில் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் எஸ்.எஸ்.பி இம்ரான் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அம்பலூர் அசோகன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.அம்பிகா, அரசு மருத்துவர் டி.செந்தில் குமார், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எஸ்.டி.நிசார் அஹமத், முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி. பாரூக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் எம்.பி.சிவன் அருள் கலந்து கொண்டு உணவு வங்கி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் டிரஸ்ட் நிர்வாகிகள், பகுதிமக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் டிரஸ்ட் நிர்வாகி எம்.ஷகீல் அஹமத் நன்றி கூறினார்.