வாணியம்பாடி ஜூன் 27 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் ராஜா என்பவர் மளிகை கடை நடத்திவருகிறார். ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று முன்தினம் மாலை கடையை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறி உமராபாத் தலைமை காவலர் ரகுராமன் கடையில் இருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை சாலையில் தூக்கிவீசினார்.
இந்த செய்தி சமுக வலைதளங்களில் வைராளாகி பரவியது.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் பாதிக்கப்பட்டவரின் கடைக்கு நேரில் சென்று அவருக்கு காவல் துறை சார்பில் புதிய எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை வழங்கினார். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட க்தழமை காவலருக்கு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அட்திரடி நடவடிக்கு பகுதி மக்களை மற்றும் சமுக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.