மேலும் இன்று 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்த அரசாங்கம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாய் அதே பகுதியில் பரிசோதனை மையம் அமைத்து அப்பகுதி முழுவதும் உள்ள பொது மக்களிடம் பரிசோதனை செய்துக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் அப்பகுதியை அடுத்து சென்னாம்பேட்டை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.
அன்று முதல் மேற்கண்ட J S S தெருவினை அரசு நிர்வாகம் அடைத்து கொரோனா தடுப்பு பணிகளை செய்து வந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குறிப்பாக சென்னாம்பேட்டை பகுதியில் எவருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை எனினும் பொது மக்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் பகுதியிலேயே அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவைக்கைகளை பின்பற்றுவோம் எனும் உறுதி மொழி எடுப்போம்.
இந்த பகுதி பெரும்பாலும் ஏழை தொழிலாளர்களும் தினக்கூலிகளும் வாழ்கின்ற பகுதி, தினந்தோறும் பணிக்கு சென்றால் மட்டுமே வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலை உள்ள குடும்பங்களே இங்கு பெரும்பான்மையாக வசித்து வருகின்றன. இந்த முழு அடைப்பால் பெரும்பான்மையான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன.
எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களின் கனிவான பார்வைக்கு அய்யா அவர்கள் பெரியபேட்டை பகுதியை சென்னாம்பேட்டையுடன் ஒப்பிடாமல் ஒரே ஒரு கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர் உள்ள எங்களது சென்னாம்பேட்டை பகுதியில் நோயாளி உள்ள அந்த தெருவை மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து மற்ற பகுதி பொதுமக்களை எப்பொழுதும் போல் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கிட வேண்டுகிறோம் .
இங்கணம் :
பொது மக்கள்
சென்னாம்பேட்டை