ராணிப்பேட்டை: மனம் திருந்திய கள்ளச்சாராய வியாபாரிகள் 144 பேருக்கு 43 லட்சம் மதிப்பில் விலையில்லா கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த பலர் அத்தொழிலை கைவிட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த அரசு சார்பில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 43 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினர்.
எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் சாராயம் காய்சி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட கண்காணிப்பாளரின் தொடர் நடவடிக்கையால் அவர்கள் தாமாக முன்வந்து அத்தொழிலை கைவிட்டதை தொடர்ந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 43 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: பொது, ராணிப்பேட்டை, வேலூர்