வாணியம்பாடி அருகே குடிமராமத்து பனியின் கீழ் ஏரிகள் தூர்வார நடவடிக்கை எடுத்த வருவாய் கோட்டாட்சியர்,

58 Views
Editor: 0

வட்டாட்சியர் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பாராட்டி ரொக்க பரிசு வழங்கினார்..

வாணியம்பாடி ஜூன் 29 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மாராபட்டு பகுதியில் உள்ள ஏரியை கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் தலைமையில் குடிமராமத்து பணி நடைபெற்றது.

இதேபோல் கொத்தகோட்டை பகுதியில் வேப்பம்பட்டா ஏரி வட்டாசியர் சிவபிரகாசம் தலைமையில் தூர் வாரும் பணி நடைபெற்றது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் தூர் வாரப்பட்ட ஏரிகளில் மழைநீர் தேங்க தொடங்கி உள்ளது.

மழைநீர் சேமிக்கும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், நேர்முக உதவியாளர் சன்பகவள்ளி, வட்டாட்சியர் சிவபிரகாசம், கிராம நிர்வாக அலுவலர் சர்குனகுமார் ஆகியோரின் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பாராட்டி ரொக்க பரிசு வழங்கினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் உடன் இருந்தார்.

மாவட்டச்செய்திகள்