வாணியம்பாடியில் அரசின் விதிகளை பின்பற்றாமல் வலம் வந்த 15 இருசக்கர வாகனங்கள்

76 Views
Editor: 0

2 கார்கள் பறிமுதல். வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் நகர போலீசார் நடவடிக்கை..

வாணியம்பாடியில் அரசின் விதிகளை பின்பற்றாமல் வலம் வந்த 15 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள் பறிமுதல். வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் நகர போலீசார் நடவடிக்கை.

வாணியம்பாடி ஜூன் 28 : தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் தலைமையில் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசின் விதிகளை பின்பற்றாமல் அவ்வழியாக வலம் வந்த 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாவட்டச்செய்திகள்