வேலூர்: கொரோனா ஒழிய கோழியை பலி கொடுத்து...! - நடுவீதியில் பூஜை செய்த பெண்கள்

63 Views
Editor: 0

வேலூரில் கொரோனா வைரஸ் ஒழிய நடு வீதியில் வரிசைத் தட்டு வைத்து பெண்கள் அம்மனை வழிபட்டனர்..

                       அம்மனை வழிபட்ட பெண்கள்

வேலூரில் கொரோனா வைரஸ் ஒழிய நடு வீதியில் வரிசைத் தட்டு வைத்து பெண்கள் அம்மனை வழிபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் புதிய உச்சம் தொட்டியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று இரவு முதல் இன்று காலைக்குள் 166 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2,126 ஆக அதிகரித்திருப்பதாகவும், இதுவரை 23 பேர் மரணமடைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம், 768 பேர் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் இதுவரை 30,927 பேருக்குத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் கூடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், வேலூர் சத்துவாச்சாரி பகுதி மக்கள், கொரோனா வைரஸ் ஒழிய பூஜை நடத்தி கோழியை பலி கொடுத்து வேண்டிக்கொண்டனர். வீதி முழுவதும் சாணம், மஞ்சள் நீர், கோமியம் தெளித்து நட்ட நடு வீதியில் கல்லை வைத்து அம்பாளாக பாவித்து கொரோனா பூஜை செய்தனர்.

அம்மனை வழிபட்ட பெண்கள் அம்மனை வழிபட்ட பெண்கள்

அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் வரிசையாகத் தட்டுவைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

``இந்த நோய் யாரையும் தாக்கிவிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களும் விரைவாக குணமடைய வேண்டும். கொரோனாவிலிருந்து அனைவரையும் காக்க வேண்டுமென்று என்ற நோக்கத்தில்தான் பூஜை நடத்தினோம்’’ என்கிறார்கள் சத்துவாச்சாரி பகுதி பெண்கள்.

 

 

 


 

மாவட்டச்செய்திகள்