முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்த காட்சி
வேலூர்:
வேலூரில் பிளஸ்-2 பாடங்கள் அடங்கிய வீடியோக்கள் பதிவிறக்கம் - முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு காரணமாக அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தே படிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து அவற்றின் மூலமாகவும் பாடங்கள் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. பிளஸ்-2 மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று மடிக்கணினியில் பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.