புதுச்சேரியில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

16 Views
Editor: 0

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 93 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,092 ஆக உயர்ந்துள்ளது..

கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 681 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,10,455 பேரும், தமிழகத்தில் 1,70,693 பேரும், டெல்லியில் 1,22,793 பேரும், கர்நாடகாவில் 63,772 பேரும், உத்தர பிரதேசத்தில் 49,247 பேரும், மேற்கு வங்காளத்தில் 42,487 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,092ஆக உயர்ந்துள்ளது.
 

மாவட்டச்செய்திகள்