வாணியம்பாடியில் கொரோனா நோய் தடுப்பு குறித்தும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடக நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு .

14 Views
Editor: 0

வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மது விலக்கு அமல்பிரிவு காவல் நிலையம்.

வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மது விலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் சார்பில் கொணாமேடு பகுதியில் கொரோனா நோய் தடுப்பு குறித்தும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடக நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எமன் வேடம் அணிந்து இருந்தவர்கள் அவ்வழியாக முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி முகக் கவசம் அணிவித்து கொரோனா நோய் தடுப்பு குறித்தும், நாடக நிகழ்ச்சி மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியை வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் செங்குட்டவன், நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் உட்பட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

மாவட்டச்செய்திகள்