வாணியம்பாடி அருகே மலை பகுதி சாலைகளில் உணவின்றி தவித்து வரும் குரங்குகளுக்கு சமுக ஆர்வலர்கள் பழங்கள் வழங்கினர்.

12 Views
Editor: 0

வாணியம்பாடி ஜூலை 27 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை பகுதி சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. .

வாணியம்பாடி ஜூலை 27 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை பகுதி சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் சாலையில் அமர்ந்து இருக்கும் குரங்குளுக்கு தண்ணீர் மற்றும் பழங்கள் வழங்கி செல்வது வழக்கம்.

கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை வித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் வருவதில்ல. மலை சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த குரங்குகள் தண்ணீர், உணவின்றி தவித்து வருகின்றனர்.

இதனை அறிந்த சமுக ஆர்வலர்கள் குரங்குகளுக்கு உணவு அளிக்க உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஏலகிரி மலை சாலைகளில் உணவுக்காக காத்திருந்த குரங்குகளுக்கு வாழை பழங்கள் வழங்கினர். உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவு வழங்கிய சமுக ஆர்வலர்களுக்கு பகுதிமக்கள் பாராட்டினர்.

மாவட்டச்செய்திகள்