வாணியம்பாடியில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு, குணமடைந்து மீண்டும் பணிக்கு வந்த தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் பழக்கூடை கொடுத்து வரவேற்றார்.

19 Views
Editor: 0

வாணியம்பாடி ஜூலை 27 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர்..

வாணியம்பாடியில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு, குணமடைந்து மீண்டும் பணிக்கு வந்த தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் பழக்கூடை கொடுத்து வரவேற்றார்.

வாணியம்பாடி ஜூலை 27 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர். இவர் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்த போது கொரோனா நோய்தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் குணமடைந்து மீண்டும் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் பணிக்கு சேர வந்தபோது அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் பழக்கூடை கொடுத்து வரவேற்றார்.

அப்போது வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், கிராமிய காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி ஆகியோர் உடன் இருந்தனர்.

மாவட்டச்செய்திகள்