வேலூர்: `ரவுடிகள் உலாவும் இடங்கள் டார்க்கெட்!’ - மக்களின் பாதுகாப்புக்காக 950 கேமராக்கள்

16 Views
Editor: 0

வேலூரில் ரவுடிசம், செயின்பறிப்பு குற்றவாளிகளைக் கண்டறிந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 950 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன..

வேலூர்: `ரவுடிகள் உலாவும் இடங்கள் டார்க்கெட்!’ - மக்களின் பாதுகாப்புக்காக 950 கேமராக்கள்:

 

வேலூரில் ரவுடிசம், செயின்பறிப்பு குற்றவாளிகளைக் கண்டறிந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 950 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

வேலூரில் கத்தி கலாசாரம் பெருகிவிட்டது. சில்லறை நோட்டுக்கும் பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும் ஆசைப்பட்டு ரவுடிகளின் புகைப்படங்களை பர்ஸில் வைத்துச் சுற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார் குற்றவாளிகளைத் தெருவுக்குத் தெரு பார்க்கலாம். பிரபல ரவுடிகளான வசூர் ராஜா, காட்பாடி ஜானி ஆகியோரால்தான் வேலூர் மாவட்டமே கதி கலங்கியிருக்கிறது என்கிறார்கள் காவல்துறையினர்.

காட்பாடி ஜானி - வசூர் ராஜா

காட்பாடி ஜானி - வசூர் ராஜா

 

இந்நிலையில், ரவுடிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் வேலூர் மாநகரப் பகுதிகளில் 950 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பெரும்பாலான வழக்குகளில், குற்றவாளிகளை அடையாளம் காண உதவுவதும், ஆதாரமாக இருப்பதும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள்தான்.

போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பும் நூதன கொள்ளையர்கள்கூட கண்காணிப்பு கேமராவில் சிக்கிக்கொள்கிறார்கள். எனவே, போலீஸின் மூன்றாம் கண்ணைப்போல், இவ்வளவு கேமராக்களைப் பொருத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதிக விபத்து ஏற்படும் பகுதி, செயின் பறிப்பு குற்றவாளிகளும் ரவுடிகளும் உலாவும் இடங்கள் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமராகண்காணிப்பு கேமரா

இவற்றின் சர்வர் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் இருக்கும். கேமராக்களின் செயல்பாடுகள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. இதற்கான ஏலம் விரைவில் நடக்கவிருக்கிறது. அதற்காக 4.9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், முகம் தெளிவாகப் பதிவாகும்படி சிறப்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டச்செய்திகள்