வாணியம்பாடி சிகரம் மேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வாணியம்பாடி,நவ.2-திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தீயணைப்பு
நிலைய அலுவலர் பி.மகேந்திரன் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தீ தடுப்பு குறித்தும்,
தீவிபத்துகளை தவிர்க்க மாணவர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு அறிவுரைகளை செயல் விளக்கம் அளித்து பேசினார்.