திருவலத்தில் ஊழல் தடுப்பு குறித்து பவர் கிரிட் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

50 Views
Editor: 0

வேலூர் மாவட்டம், பொன்னை கூட்டு சாலை சந்திப்பிலிருந்து பவர் கிரிட் நிறுவனம் சார்பில் கோட்ட மேலாளர் வெங்கடேஸ்வரராவ் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..

திருவலத்தில் ஊழல் தடுப்பு குறித்து பவர் கிரிட் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

வாணியம்பாடி,நவ.2- வேலூர் மாவட்டம், பொன்னை கூட்டு சாலை சந்திப்பிலிருந்து பவர் கிரிட் நிறுவனம் சார்பில் கோட்ட மேலாளர் வெங்கடேஸ்வரராவ் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் பவர் கிரிட் நிறுவனத்தின் ஊழியர்களும் பணியாளர்களும் பங்கேற்று யாரும் ஊழலுக்கு துணை போக கூடாது, ஊழல் லஞ்சத்தை ஒழித்து நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி வல்லரசாக மாற்ற வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேரணி திருவலம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது

மாவட்டச்செய்திகள்