வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு.
வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.
நேற்று காலை 11 மணிக்கு நடைபெற இருந்த விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தன நிலையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறியும்,
மேலும் கூட்டத்திற்கு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பிடிஓக்கள் வேளாண்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவு உட்பட அதிகாரிகள் வருவதில்லை எனவும்.
மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை, எனக்கூறி. கண்துடைப்புக்கு உதவியாளர்கள் மட்டும் வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்து விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கொடுக்கப்படும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மேலும் எங்களுக்கு இருக்கை கூட சரிவர போடுவதில்லை எனக்கூறி குற்றம் சாட்டினார்.இனிவரும் காலங்களில் இவை அனைத்தும் சரி செய்தால் மட்டுமே விவசாயிகள் தீர்வு நாள் கூட்டத்தில் பங்கேற்க போவதாக தெரிவித்தார்.