வாணியம்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

84 Views
Editor: 0

வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை.

வாணியம்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை

வகித்தார். நகர செயலாளர் பி.அன்பரசு முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் மாஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் தன்னுடைய நண்பரின் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க இருசக்கர வாகனத்தில் பூவுடையூர் கிராமத்தை கடந்து சென்ற போது சாலையின் குறுக்கே அவரை வழிமறித்து அந்த பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் அவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

மாவட்டச்செய்திகள்