வாணியம்பாடி நூலகத்தில் தேசிய நூலக வார விழா பள்ளி மாணவ/மாணவியர்கள் 700 நபர்கள் நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கை 

84 Views
Editor: 0

வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில், 57 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு,  பள்ளி மாணவ - மாணவி யர்களுக்கான கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள்  நடைபெற்றது.

இவ்விழாவில், நல்நூலகர் வ.மணிமாலா வரவேற்புரையாற்றினார்.வாசகர் வட்ட தலைவர் பார்தீபன், மாவட்ட நூலக அலுவலர் லூ.கிளமண்ட், நூலக கண்காணிப்பாளர் மா.கோபாலகிருஷ்ணன்  தலைமை ஏற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக  வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் திருமதி  ஜி.அஜிதாபேகம்  மாணவர்களுக்கான,   கட்டுரை, ஒவியம், போட்டிகளில் வெற்றிபெற மாணவ/மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்

வாணியம்பாடி நூலகத்தை பயன்படுத்தி T.N.P.S.C GROUP.4 தேர்வில் வெற்றி பெற்ற ஜெ.சதீஷ்  போட்டி தேர்வு மாணவருக்கு வருவாய் கோட்டாட்சியர் சிறப்பு செய்தார்
இதில் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி,இந்து மேல்நிலப்பள்ளி,வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ/மாணவியர்கள் 700 நபர்கள் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்தார்கள்

 இந்நிகழ்ச்சியில், வாணியம்பாடி வட்டாட்சியர் உமாரம்யா
மற்றும் கே.எம்.டி.சரவணன்,சக்கரவர்த்தி கோவிந்தன் தமிழாசிரியர்கள் கோட்டீஸ்வரன்  அன்பரசன், வேர்கள் அரக்கட்டளை  வடிவேல்சுப்பிரமணி மற்றும்  நூலக  பணியாளர் காயத்ரி 
நூலக வாசகர்கள் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
முடிவில் நல்நூலகர் ஜெ.விஜயகுமார் நன்றி கூறினார்

மாவட்டச்செய்திகள்