வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி கேலி கிண்டல் செய்த வந்த இளைஞரை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.
புகாரின் பேரில் இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு.
வாணியம்பாடி,நவ.22- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (25). இவர் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இடியாப்பம் விற்று வரும் நிலையில், நேற்று மாலை இவர் வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியில் பள்ளி முந்து சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனைகண்ட பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் இம்ரானை கைகளைகட்டி சரமாரியாக தாக்கி, வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்,
அதனை தொடர்ந்து இம்ரானிடம் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் விஜய்குமார் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இம்ரானை பொதுமக்கள் மற்றும் பெண்கள் கைகளைக் கட்டி தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டியும், ஆபாசமாக பேசிய நபரை பொதுமக்கள் தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.