வாணியம்பாடியில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரோபோட்டிக் சம்பந்தமான மாணவர்களிடையே கலந்தாய்வு மற்றும்  பயிற்சியரங்கம்.

154 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகளின் திறன் மேம்பாடு.

வாணியம்பாடியில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரோபோட்டிக் சம்பந்தமான மாணவர்களிடையே கலந்தாய்வு மற்றும் பயிற்சியரங்கம்.

வாணியம்பாடி,நவ.25- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகளின் திறன் மேம்பாடு & நடைமுறையியல்,

எலக்ட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில், VE ரோபோடிக்ஸ் அகாடமி சார்பில் பயிற்சியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எம். செந்தில் குமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி நிர்வாக இயக்குனர் கே.எஸ்.ஷபானா பேகம் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக முதல்வர் சத்தியகலா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு ரோபோக்களை உருவாக்குதல், நிரலாக்கம் செய்தல் போன்ற அனுபவங்களைப் பெற்றனர். அவர்கள் பல்வேறு ரோபோ அமைப்புகள், மைக்ரோகண்ட்ரோலர்கள் மற்றும் மின்னணுவியல் பற்றி அறிந்து கொண்டனர். டிஜிட்டல் ஐஆர் சென்சார்கள், டி.டி.எம்.எஃப் தொகுதிகள் மற்றும் முடுக்கமானி சென்சார்கள் ,மேலும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட

தலைப்புகளையும் இந்த பயிற்சி உள்ளடக்கியது.

இந்த பயிற்சியரங்கம் மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பற்றிய விரிவான புரிதலை வழங்குகிறது. இத்தகைய பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம், மாணவர்கள் குறியீட்டு முறை, சிக்கலைத் தீர்ப்பது மற்றும் விமர்சன சிந்தனை ஆகியவற்றில் அத்தியாவசிய திறன்களை வளர்த்துக் கொண்டு பயன்பெற்றனர்.

முடிவில் பள்ளி தாளாளர் எம்.செந்தில் குமார், VE ரோபோடிக்ஸ் அகாடமியின் நிறுவுனர் இளந்திரை அரசன் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

மாவட்டச்செய்திகள்