மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் – வாக்குப்பதிவு ஆம்பம்

61 Views
Editor: 0

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது..

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அத்தோடு ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 9 கோடியே 70 இலட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

மகாராஷ்டிராவில் பாரதிய.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்து இருந்தது. இதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13 ஆம் திகதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் இன்று 2ஆவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஒரு கோடியே 23 இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.