வாணியம்பாடி பிப் 27 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் இசுலாமியர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. என்.பி.ஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வாபஸ் பெற வலியுறுத்தி 9 வது நாளாக இன்று இசுலாமியர்கள் நோம்பு வைத்தும், சிறப்பு பிரார்த்தனை செய்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து வழக்கு போடுவதும், மிரட்டி வருவதால் பதிலுக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கல் குழந்தைகளிடம் பூக்களை கொடுத்து போலீசாரிடம் வழங்கினர்.
போராட்டத்தில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது : -
மாநில அரசு மக்களின் உனர்ச்சிகளை புரிந்து கொள்ளாமல் சிறு பிள்ளைத்தனமாக காவல் துறை மூலமாக இறந்தவர்கள், ஊரில் இல்லாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சமன் அனுப்பி வருகின்றது. அமைதி வழியில் போராடிய மக்களுக்கு திமுக எப்போவும் துணையாக நிற்கும். டில்லியில் நடந்த பிரச்னைக்கு யார் காரணம் என்று மத்திய அரசுக்கு தெரியும், அவர்கள் பாராமுகமாக உள்ளனர். பாராளுமன்றத்தில் திமுகாவின் நடவடிக்கை இருக்கும் என்றார்.
ரிஸ்வானா கூறுகையில் :-
என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. என்.பி.ஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிராக இன்று நோம்பு என்னும் வழிப்பாடு முறையில் எதிர்ப்பு தெரிவித்தும், டில்லி கலவரத்தில் காவல் துறை அமைதியாக இருந்தது வன்மையாக கண்டித்தும், கலவரத்திற்கு துணை போன காவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை வன்முறைக்கு துணையாக உள்ளனர் என்றால் வன்முறைக்கு யார் காரணம் என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும். இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இப்போதுதான் கலவரங்கள் பார்க்கின்றோம். தமிழக முதல்வரின் அமைதி கூடோ ஆச்சரியத்தை ஏற்படுத்திகிறது. அவருக்கு மக்கள் தான் தேர்ந்து எடுத்துள்ளனர். இதனால் அவர் மக்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசிடம் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்த வேண்டும் என்றார்.