வேலூர் மாவட்டத்தில் நான்காயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

119 Views
Editor: 0

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 190 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது..

                                 கோப்புப்படம்

வேலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,814 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 190 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,113 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். 

மாவட்டச்செய்திகள்