ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டர் உயிரிழப்பு.

52 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம், புதுமனைப் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (42)..

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டர் உயிரிழப்பு.

வாணியம்பாடி,நவ.15- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம், புதுமனைப் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (42). இவர் அதே ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கம் போல காலை நேரத்தில் கிராம மக்களுக்கு தண்ணீர் விடுவதற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் வைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் இயக்குவது வழக்கம்.

இந்நிலையில் மோட்டாரில் இருந்து சுவிட்ச் பாக்ஸ் செல்லக்கூடிய மின் ஒயர் பழுதாகி இருப்பது தெரியாமல் இன்று காலை தண்ணீர் விடுவதற்காக சுவிட்ச் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி சுகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உமராபாத் போலீசார் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

மாவட்டச்செய்திகள்