வாணியம்பாடி விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 (கணக்கு போட்டி) நடைபெற்றது.
வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செங்கலிகுப்பம் பகுதியில் இயங்கி வரும் விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 (கணக்கு போட்டி)பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியில் படிக்கும் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இசுலாமிய கல்லூரி கணித துறை உதவி பேராசிரியர் பாலகிருஷ்ணன், இசுலாமிய பெண்கள் கல்லூரி கணித துறை உதவி பேராசிரியை ஜக்தீஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், நடுவர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பொதுச்செயலாளர் சி.பர்வேஸ் அஹமத் தலைமை வகித்தார். சுனா உவேஸ் அஹமத் அஹமத் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சாதிக் பாஷா
அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
சந்திராயன் 3 திட்ட இயக்குநர் முனைவர் பி.வீரமுத்துவேல்
கலந்து கொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி துணை முதல்வர் ஆனந்த் கால்சன் நன்றி கூறினார்.
வாணியம்பாடி விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 கணக்கு போட்டி நடைபெற்றது
பதிவு: நவம்பர் 24, 2024 16:42 52 Views வாணியம்பாடி விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 (கணக்கு போட்டி) நடைபெற்றது.
வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செங்கலிகுப்பம் பகுதியில் இயங்கி வரும் விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 (கணக்கு போட்டி)பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..