வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 3பேர் உயிர்தப்பினர்.

57 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது..

வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 3பேர் உயிர்தப்பினர்.

வாணியம்பாடி,நவ.23- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகளால் வாகனங்கள் நின்று மெதுவாக செல்லக்கூடிய நிலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டச்செய்திகள்