வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் தமிழக முதல்வரை கண்டித்து பாமகவினர் சாலையில் மறியல் போராட்டம்.

76 Views
Editor: 0

அதானி விவகாரம் குறித்து பாமக நிறுவன தலைவர் ராமதாஸின் அறிக்கை குறித்த கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தால் போராட்டம்..

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் தமிழக முதல்வரை கண்டித்து பாமகவினர் சாலையில் மறியல் போராட்டம்.

அதானி விவகாரம் குறித்து பாமக நிறுவன தலைவர் ராமதாஸின் அறிக்கை குறித்த கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தால் போராட்டம்.

வாணியம்பாடி,நவ.26- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே தமிழக முதல்வரை கண்டித்து பாமகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்படனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென டயரை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸார் உடனடியாக டயரை தண்ணீர் ஊற்றி அணைத்து பின்னர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பாமகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்டச்செய்திகள்