வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு திமுக கிளை சார்பில் தமிழ்நாடு துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
வாணியம்பாடி, நவ.27- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு சி.வி.பற்றறை பகுதியில் திமுக கிளை சார்பில் தமிழ்நாடு துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கிளை கழக செயலாளர் பி.சுகுமார் தலைமை வகித்தார். கிளை அவைத்தலைவர் பொன்னுசாமி, துணை செயலாளர் சசிகுமார், கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக உதயேந்திரம் பேரூர் கழக செயலாளர் அ.செல்வராஜ் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்தும், கேக் வெட்டியும், இப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேரூர் கழக அவைத்தலைவர் குமார், மாவட்ட பிரதிநிதி அம்பலவாணன், பொருளாளர் மீர் முகமது கனி, ஆதிதிராவிட நலத்துறை துணை அமைப்பாளர் அசோகன், தென்றல் தமிழரசன் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பகுதி இளைஞர்கள்
கலந்து கொண்டனர்