மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்.

56 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்ததிற்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்கள் மீது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்.

வாணியம்பாடி,நவ.27- திருப்பத்தூர் மாவட்ததிற்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்கள் மீது நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமில் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 07 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா காரணம் கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இதனை புதிதாக 50 புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார்.

மாவட்டச்செய்திகள்