வாணியம்பாடி அருகே திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த விழா கொண்டாட்டம்.
வாணியம்பாடி, நவ.28- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் வெள்ளக்குட்டை கிராமத்தில்
திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த விழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், தேர்வு அட்டைகள், பேனா, பென்சில் ஆகியவற்றை வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.வி.கிரிராஜ் செய்து இருந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி கலந்து கொண்டு வெள்ளைக்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 300 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், தேர்வு அட்டைகள், பேனா, பென்சில் பெட்டகம் மற்றும் இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தாமோதரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஆலங்காயம் ஒன்றியகுழு தலைவர் சங்கீதா பாரி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பூ.சதாசிவம், மாவட்ட பிரதிநிதி
வே.மனோகரன் மற்றும் வெள்ள குட்டை ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்


Editor: 0









