உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி மிக முக்கிய தேவை. கல்வி ஒருவனுக்கு நல்ல புத்தியையும், அறிவையும் கொடுக்கிறது. பெரும்பாலானோர் அவர்கள் படித்த படிப்பு சார்ந்த துறையிலேயே வேலை செய்கின்றனர். ஆனால் பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருக்கும்.
சிலர் நல்ல சம்பளத்துடன் பெரிய வேலையில் இருப்பார்கள். இருப்பினும் அவர்களுக்கு அந்த வேலை திருப்திகரமாக இருக்காது. தற்போதுள்ள தலைமுறையினர் நல்ல வேலையும் மனதுக்கு பிடித்த வேலை அமைய வேண்டும் என விரும்புகின்றனர். ஜோதிடப்படி ஒவ்வொரு ராசியினரும் எப்படிப்பட்ட வேலையை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்...
ரிஷபம்
ரிஷபம்
சுக போகத்தையும், ஆடம்பரத்தையும் தரக்கூடிய சுக்கிர பகவான் அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் ஒரு நல்ல வாசகர்கள். எனவே அவர் ஒரு நல்ல எழுத்தாளராக, பேச்சாளராக இருக்க முடியும். அவர்கள் எழுத்து துறையில் தான் ஆறுதலையும் அமைதியையும் காண்கிறார். அவர் எழுதியதை மற்றவர்களுக்குக் காண்பிக்கும் போக்கும் அவருக்கு உண்டு. எழுத்து துறையில் இருந்தால் அவர்களது வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். அவர் எதிர்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக இருக்க முடியும்.
ரிஷப ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?
மேஷம்
போர் குணம், சிறந்த உடல் வலிமையுடன் கூடிய செவ்வாய் பகவான் அதிபதியாகக் கொண்டிருக்கும் மேஷ ராசியினர் எப்போதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கக்கூடியவர்கள். இவருக்கு மிகவும் பிடித்த விஷயம், விளையாட்டில் ஈடுபடுவது. ஒரு குறிப்பிட்ட விளையாட்டு பயிற்சியாளராக இருப்பது அல்லது விளையாட்டு வீரராக இருப்பது அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கைப் பாதையாகும். இவர்கள் விரைவான கற்பவர்கள் மற்றும் புத்திசாலிகள். இது மற்றவர்களை விட ஒரு படி மேலே கொண்டு செல்லக்கூடியது. இந்த விளையாட்டில் முக்கியமானதாகும். பயிற்சியாளராக இருப்பின் அது அவர்களின் மாணவர்களுக்கும் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தைத் தரும்.
மேஷ ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?
மிதுனம்
இந்த ராசியினர் பொதுவாக நல்ல ஊடக ஆளுமைகள். இவர்கள் நல்ல விவேகமானவர்கள் என்பதால் ஆளுமையில் சிறந்து விளங்குவர். இது அவரை ஒரு சிறந்த தொகுப்பாளராக விளங்கச் செய்யும். தனது புத்திசாலித்தனம், கவர்ச்சிகர தோற்றம் மற்றும் திறமை ஆகியவற்றால் பார்வையாளர்களை மகிழ்விக்கும் சக்தி அவருக்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்டவர்கள். இதனால் இவர்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் வெற்றி பெறும். நடிகர் போன்ற பொழுதுபோக்கு துறையில் ஒரு நிலை அவர்களுக்கு ஒரு நல்ல தொழில். அதுமட்டுமல்லாமல் பயணத்தின் மீது அதிக விருப்பம் கொண்டவர்கள்.
Gemini Career Horoscope: மிதுன ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?
கடகம்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் மனதை வசியப்படுத்தக் கூடிய ஒரு திறம் மிக்கவர்கள். இதனால் எந்த ஒரு வேலையையும் மானசீகமாக செய்யக்கூடியவர்கள். கலை ஆர்வமிக்க இவர்கள் இருக்கக் கூடிய இவர்கள் மாணவர்களின் மன நிலையைப் புரிந்து அவர்களுக்கு பிடித்தமாதிரி பாடங்களைக் கற்றுத் தரக்கூடிய நல்ல ஆசிரியராக விளங்க முடியும். அதுமட்டுமல்லாமல் உணவு தயாரித்தல், வாசைப் பொருட்கள் தயாரித்தல், புகைப்பட கலைஞர் போன்ற கலைத்துறையில் இவர்கள் ஜொலிக்க முடியும். ஆசிரியராக மிகச் சிறப்பாக செயல்பட்டு மாணவர்கள் உருவாக்க உதவுகிறது.
Cancer Career Horoscope: கடக ராசியின் தொழில் மற்றும் செல்வநிலை எப்படி இருக்கும்?
சிம்மம்
சூரிய பகவானை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர் ஆளுமையுடன் இருக்கக் கூடியவர்கள். சிறப்பான ஆலோசகராக இருப்பவர்கள். அதனால் இவர்கள் மற்றவர்களுக்கான தொழில் ஆலோசனை கொடுப்பதிலும், சந்தேகங்களை தீர்ப்பதற்கான தொழிலை செய்யலாம். அதுமட்டுமல்லாமல் கனிம துறையில் சிறப்பான பலனை அடையக் கூடியவர்கள். இவர்கள் வழக்கறிஞராக இருந்தாலும் மிகச்சிறப்பான முன்னேற்றத்தைப் பெற முடியும்.
Leo Career Horoscope:சிம்ம ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?
கன்னி
புத்தி கூர்மை, அறிவை வழங்கக் கூடிய புதன் அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்கு மற்றவர்களை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளக் கூடிய குணம் கொண்டவர்கள். இதனால் இவர்கள் மருத்துவ துறை, செவிலியர்கள் போன்ற துறையில் இருப்பது மிகவும் சிறப்பானது. அவர்கள் சுயநலமின்றி தங்கள் மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்கள். தங்கள் வேலையில் துல்லியம் உள்ள இவர்களுக்கு ஆசிரியராகவும், செய்தியாளர்கள் ஆகவும் நன்றாக பணிபுரிவார்கள். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் மிக சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.
துலாம்
துலா ராசியினர் ஆளுமை கொண்டவர்கள். இவர்கள் நிர்வாகத்தை சிறப்பாக செய்யக்கூடியவர்கள். இவர்கள் வணிகத்தை நிர்வகிக்கும் விதம் பாராட்டத்தக்கது. இவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் அங்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள். கடின முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு இவர்கள் களத்தின் உச்சத்திற்கு செல்ல முக்கிய காரணமாக அமையும்.
இவர்கள் வழக்கறிஞர், இசைக்கலைஞர், நடிப்புத் துறையில் மிக பெரிய உயரத்தை எட்ட வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள். அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் தனித்துவமும் படைப்பாற்றலும் கொண்டவர்கள். இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், ஓவியர்கள் என வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். தங்கள் திறமைகளை வழிநடத்த நினைக்கக்கூடியவர்கள். இவர்கள் பிறக்கும் போதே ஒரு கலைஞராக இருப்பார்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுகிறார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் விருச்சிக ராசிக்காரர்கள் புகழ்பெறுவர்.
மருத்துவத்தில் பெரிய இடத்தை பிடிக்க வாய்ப்பு உண்டு. கிராமம் மற்றும் நகரத்தின் மத்திய பகுதிகளில் வசிப்பது நல்லது.
தனுசு
குரு அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் எந்தத் துறையிலும் அவர்கள் சிறப்பாகச் செய்ய முடியும். பேராசிரியராகும் வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நல்ல ஆராய்ச்சியாளரும் கூட.
வழக்கறிஞர், தட்டச்சு, நடிப்பு, பொதுமக்களுடனான தொடர்பு, மருத்துவம் போன்ற துறையில் புகழ் அடைவர். எழுத்தாளர் ஆனால் அதிகம் சம்பாதிக்கலாம். நடிகன் ஆனால் புகழ்பெறலாம். அரசியல்வாதியாகவும் வாய்ப்புண்டு.
தனுசு ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?
மகரம்
சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசியினர் திடமான மனம் உன்னத திறமையாளர் ஆவார் . இவர்கள் சொந்த தொழிலை செய்யவும், வணிகத்தில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும். இவர்களை நல்ல தலைவர்களாக வாய்ப்புள்ளது. மகர ராசியினர் நேர்மறையான வழியில் எதையும் செய்ய வேண்டும் என எதிர் பார்க்கக்கூடியவர்கள். அதே போலத் தான் அவரைச் சுற்றியுள்ள உலகமும் இருக்க வேண்டும் என எண்ணக்கூடியவர்கள்.
இவர்களின் தொழில், வழக்கறிஞர் உணவு சம்பந்தமான தொழில், நிலக்கரி சுரங்கம் போன்றவைகள் நல்ல லாபம் கிட்டும். மகர ராசிக்காரர்கள் நல்ல வழக்கறிஞராக செயல்படுவார்கள். லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்.
கும்பம்
எளிமையாகவும், அனைவருடனும் எளிதில் பழக்கக்கூடிய கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் தன்னைப் போல சமமாகவும், நியாயமாகவும் பார்க்கக்கூடியவர்கள். இவர்கள் பொறியியல், விஞ்ஞானம், கல்வித்துறை தொடர்பான துறையில் சிறந்து விளங்குவார்கள்.
மீனம்
குருவின் அருளைப் பெற்ற மீன ராசியினர் வலுவான அறிவைக் கொண்டிருப்பார்கள். இந்த அறிவை பச்சாத்தாபத்துடன் இணைப்பதில் இவர்கள் கெட்டிகாரர்கள். கதை எழுதுவது, கதை கேட்பது, புகைப்படங்கள் எடுப்பது படம் வரைவது, நல்ல படங்களை பார்ப்பது, கண்ணாடி பொருட்களை சேர்ப்பது போன்ற வேலைகள் இவர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். மருத்துவத்துறையில் ஜொலிக்கக் கூடிய இவர்கள் வேறு எவராலும் செய்ய முடியாத வகையில் தங்கள் நோயாளிகளை சிறப்பாக கவனித்து உடல் பிரச்னைகளிலிருந்து நலத்தை கொடுக்ககூடியவர். அதனால் மருத்துவத்துறை இவர்களுக்கு சிறப்பானதாகும்.