சென்னை: ஜூலை மாதம் ஏழாவது மாதம். வாழ்க்கை பலருக்கும் பயத்தோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. சிலருக்கு ஆரோக்கியம் பற்றிய பயம், சிலருக்கு வேலை பற்றிய பயம், சிலருக்கு பொருளாதார நிலை, வருமானம் பற்றிய பயம், சிலருக்கு குடும்ப சூழ்நிலைகளை நினைத்து பயமாக இருக்கிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை. என்னதான் கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாமல் இருந்தாலும் தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் பயமில்லாமல் சமாளித்து விடலாம். இப்போது உள்ள நோய் பரவல் கால கட்டத்தில் துலாம் முதல் மீனம் வரை ஆறு ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ஜூலை மாதம் சூரியன் மிதுனம் ராசியில் பாதி நாட்களும், கடகம் ராசியில் 15 நாட்களும் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் மிதுனம் ராசியில் இருந்த கிரகங்களின் கூட்டணி பிரிகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனம் ராசியில் புதன், ராகு, தனுசு ராசியில் கேது, குரு, மகரம் ராசியில் சனி, மீனம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியனைத்தவிர பெரிய அளவில் கிரகங்கள் இடமாற்றம் இல்லை. இப்போது உள்ள கால கட்டத்தில் ரொம்ப சந்தோஷமாக இருப்பது மாணவர்கள் மட்டும்தான் விடுமுறை காலத்தை ரொம்பவே உற்சாகமாக கொண்டாடினாலும் மேல்நிலைக்கல்வி பற்றிய திட்டமிடுதல் அவசியம் என்பதால் கொஞ்சம் நேரம் விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு படிக்கவும் நேரம் செலவிடுங்கள். இந்த மாதம் விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகம் கைகூடி வந்துள்ளதால் பண வருமானம் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். இவர்களைத் தவிர வேறு யாருக்கு பண வருமானம் வரும், யாருடைய வேலை நிரந்தரமாக இருக்கும், யாருக்கு பிரச்சினை வரும் அதை எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.
துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்கு எட்டாம் வீட்டில் ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். நீங்க உங்க ராசிக்கு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். தடைகளைத் தாண்டி இந்த மாதம் முன்னேற வேண்டியிருக்கும். என்ன நெருக்கடி இருந்தாலும் வேலையை விட்டு விட வேண்டாம். எந்த காரணத்திற்காகவும் பணம் யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. வீட்டிலையும் சரி வெளியிலும் சரி யாருடனும் வீண் வம்பு வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கிரகங்கள் அதிகம் மறைந்திருப்பதால் புதிய திட்டங்கள் எதுவும் வேண்டாம். வேலை மாற வேண்டும் வீடு கட்டவேண்டும் என்று நினைத்திருந்தால் அதை ஒத்திப்போடுங்க. குரு உங்களுக்கு 3ஆம் இடத்தில் இருப்பது சிறப்பில்லை என்றாலும் குருவின் பார்வையால் சில பாதிப்புகள் சரியாகும். பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் இந்த மாதத்தை கடந்து விடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்கு இந்த மாதம் கிரகங்கள் ரொம்ப சாதகமாக இருக்கிறது. உங்களுக்கு மாளவியா யோகம் கிடைக்கிறது. ராசிநாதன் செவ்வாய் நிறைய நன்மைகளை கொடுக்கப்போகிறார். மனதாலும் உடலாலும் உற்சாகமாக இருப்பீர்கள். குரு, சனி பலத்தோடு இருப்பதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நீங்க செய்யிற வேலையை தெளிவாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பும் ஆதரவும் பெருகும். சுக்கிரன் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் மனரீதியாக உற்சாகமாக இருப்பீர்கள். தெம்பும் தைரியமும் கூடும். வாழ்க்கைத்துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வருமானம் அபரிமிதமாக கிடைக்கும். வரவே வராது என்று நினைத்த பணம் வரும். எதிர்பாராத நிலையில் திடீர் அதிர்ஷ்டம் வரும். இந்த மாதம் உங்களுக்கு மாளவியா யோகம் இருப்பதால் புதிய சொத்துக்கள், வண்டி வாகனம் வாங்கலாம். மாத முற்பகுதியில் வேலையில் இருந்த பிரச்சினைகள் மாத பிற்பகுதியில் தீரும். மாத பிற்பகுதியில் சூரியன் இடம் மாறிய பின்னர் வேலையில் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். ஏழரை சனியால் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்திருப்பீங்க. இனி சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப் போகிறது.
விருச்சிகம் ராசிக்கு இந்த மாதம் கிரகங்கள் ரொம்ப சாதகமாக இருக்கிறது. உங்களுக்கு மாளவியா யோகம் கிடைக்கிறது. ராசிநாதன் செவ்வாய் நிறைய நன்மைகளை கொடுக்கப்போகிறார். மனதாலும் உடலாலும் உற்சாகமாக இருப்பீர்கள். குரு, சனி பலத்தோடு இருப்பதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நீங்க செய்யிற வேலையை தெளிவாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பும் ஆதரவும் பெருகும். சுக்கிரன் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் மனரீதியாக உற்சாகமாக இருப்பீர்கள். தெம்பும் தைரியமும் கூடும். வாழ்க்கைத்துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வருமானம் அபரிமிதமாக கிடைக்கும். வரவே வராது என்று நினைத்த பணம் வரும். எதிர்பாராத நிலையில் திடீர் அதிர்ஷ்டம் வரும். இந்த மாதம் உங்களுக்கு மாளவியா யோகம் இருப்பதால் புதிய சொத்துக்கள், வண்டி வாகனம் வாங்கலாம். மாத முற்பகுதியில் வேலையில் இருந்த பிரச்சினைகள் மாத பிற்பகுதியில் தீரும். மாத பிற்பகுதியில் சூரியன் இடம் மாறிய பின்னர் வேலையில் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். ஏழரை சனியால் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்திருப்பீங்க. இனி சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப் போகிறது.
தனுசு
தனுசு ராசிக்கு ஏழரை சனியோட ஆதிக்கம் இருக்கிறது. இப்போது ஜென்ம குருவும் வந்து கேது உடன் இணைந்திருக்கிறார். இந்த மாதம் வருமானம் வருவதற்காக வழி தெரியும். கொஞ்சம் மந்தமாக இருக்கே என்று நினைப்பீர்கள். என்ன செய்வது கால நிலை அப்படித்தான் இருக்கிறது. எதை தொட்டாலும் தடை தாமதங்கள் வந்துதான் முடியும். வியாபாரம் தொழிலுக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஆதரவாக எந்த கிரகங்களும் இல்லை. மாத பிற்பகுதியில் சூரியன் எட்டாம் வீட்டிற்கு வருவது சிறப்பு இல்லை. வேலை செய்யும் இடத்தில் விட்டுக்கொடுத்து போங்க உயரதிகாரிகளிடம் மோதல் போக்கை கடைபிடிக்காதீங்க. ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வீண் விரைய செலவு செய்யாதீங்க. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. உங்க ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. இந்த மாதம் வீடுகளை பராமரிப்பு செய்வதற்கான வேலைகளை செய்வீர்கள். இந்த மாதம் அமைதியாகவும் பொறுமையாகவும் கடத்தி விடுங்கள். வரப்போகும் காலங்கள் வசந்தகாலமாக இருக்க இறைவனை வழிபடுங்கள்.
மகரம்
இந்த மாதம் உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எச்சரிக்கையாக இருங்க. புதிய முயற்சிகள் எதையும் செய்யாதீர்கள தடைகள் வரும். அப்புறம் நினைத்தது நடக்கலையே என்ற வருத்தம்தான் மிஞ்சும். உங்க ராசிக்கு ஜென்ம சனி நடக்கிறது. சனி உங்க ராசியில் வக்ரமடைந்து சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. என்னடா இது எதைத்தொட்டாலும் தடங்கல் வருகிறதே என்ற எரிச்சலும் கோபமும் வரும். எந்த சுப காரியமும் செய்வதற்கு முன்பு பெரியவர்களிடம் ஆலோசனை பெற்று செய்யுங்க. ஒரே ஒரு ஆறுதல் இந்த மாதம் சுக்கிரன் சஞ்சாரத்தினால் நீங்க நினைத்தது நிறைவேறும். பிள்ளைகளுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். பண முதலீடு செய்யும் புதிய திட்டங்கள், முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். பங்குச்சந்தை முதலீடுகள் வேண்டாம், மாத பிற்பகுதியில் உங்களுக்கு சாதகமான காலம் வரும் வரை காத்திருங்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகளுக்கு இது சரியான மாதமில்லை. உங்க குடும்ப வாழ்க்கையில சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் அதை தைரியமாக சமாளிப்பீர்கள். இந்த மாதம் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம். திடீர் பயணங்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. இருக்கிற இடத்தில் அமைதியாக கவனமாக இருங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசிக்கு கிரகங்கள் ரொம்ப அற்புதமாக இருக்கும் நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்து மாளவியா யோகத்தை கொடுக்கப் போகிறார். வண்டி வாகனம் வாங்கலாம், வீடு கட்ட பிளான் பண்ணலாம். வேலையில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிய வருமானம் வரும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். ஏழரை சனி நடப்பவர்களுக்கு சில சுப விரைய செலவுகள் வரும். பேச்சில் நிதானமாக இருங்க கோபமாக பேசி வம்புல மாட்டிக்காதீங்க. திடீர் வருமானங்கள் வரலாம். அதே போல திடீர் செலவுகளும் வரும். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. உங்க குடும்பத்தில வாழ்க்கைத்துணையோட ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. சொத்துக்களை வாங்கவும் விற்கவும் செய்யலாம், தொழில் வியாபாரத்தில் நிறைய லாபம் வரும். சில நேரங்களில் மந்தமாக இருந்தாலும் கவலைப்படாதீங்க திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பண வரவு வரும். எந்த விசயத்திலும் கூடுதல் விழிப்புணர்வோடு இருங்க. இடமாற்றம் ஏற்படும் அதுவும் நன்மையில் முடியும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ரொம்ப அற்புதமாக இருக்கும். கிரகங்கள் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. திடீர் பணவரவு நன்றாக இருக்கும். எதிர்பாரத பண வரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். புதன் நான்காம் வீட்டில் இருப்பதால் உடல் வாழ்க்கை துணையோட ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மாத பிற்பகுதியில் சூரியன் இடம் மாறுவதால் திடீர் செலவுகள் வரலாம், திட்டமிட்டிருந்த காரியங்கள் எளிதில் நடைபெறும். சொத்துக்கள் வாங்கலாம். வீடு வாகனங்கள் வாங்க மேற்கொள்ளும் முயற்சிகள் நன்மையில் முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழல் நிலவுகிறது. திடீர் பயணங்கள் வரலாம். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். சொந்தக்காரர்களை பார்த்து நாளாக விட்டதே என்று நினைப்பீர்கள் பக்கத்தில் இருந்தால் போய் பார்த்து விட்டு வரலாம். கணவன் மனைவி இடையே இந்த மாதம் நெருக்கம் கூடும்.