இன்றைய ராசி பலன் – 14-08-2020

13 Views
Editor: 0

இன்றைய ராசி பலன் – 14-08-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்..

மேஷம்:

Mesham Rasiமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பணப்பிரச்சினை குறையும்.

ரிஷபம்:

Taurus zodiac signரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினை குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்:

Gemini zodiac signமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்புடன் இருப்பார்கள். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கடகம்:

Kadagam Rasiகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு சிறப்பாக இருக்கும். நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்:

Leo zodiac signசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு மன சங்கடங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கன்னி:

kanniகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

துலாம்:

Thulam Rasiதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நாவை அடக்குவது மிகவும் நல்லது.

விருச்சிகம்:

Scorpius zodiac signவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். திடீர் வெளியிட பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு:

dhanusuதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும்.

மகரம்:

Magaram rasiமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasiகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மீனம்:

meenamமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக வெளியிட பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

காலச்சுவடு செய்திகள்